×

ஷூட்டிங்கில் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்கள்; தடுக்க வருகிறது புது சட்டம்

மலையாள படத்தின் படப்பிடிப்பில் ஷைன் டாம் சாக்கோ என்ற வில்லன் நடிகர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சில வருடம் முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இதே போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறார் மலையாள நடிகர் ஷேன் நிகம். வெயில், குர்பானி என்ற மலையாள படங்களில் நடிக்க ஷேன் நிகம் அதிக சம்பளம் கேட்டிருக்கிறார். தர மறுத்தால் நடிக்க மாட்டேன் என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார்.

இதையடுத்து தயாரிப்பாளர்கள், மலையாள பட அதிபர்கள் சங்கத்தில் முறையிட்டனர். அப்போது ஷேன் நிகம் ஷூட்டிங்கில் போதை பொருள் பயன்படுத்துவதாக புகார் கூறினர். இதையடுத்து ஷேன் நிகமுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி சட்ட அமைச்சர் பாலன் கூறும்போது, ‘படப்பிடிப்பு தளங்களிலும் போதை மருந்து பயன்படுத்துவது பற்றி புகார்கள் வருகின்றன. இதை தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்படும்’ என்றார்.

Tags : Actors ,shooting ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்...