×

அட்லிக்கு கைநழுவிய ஷாருக் படம்

பிகில் படத்தை முடித்துவிட்டு தளபதி 64 படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார் விஜய். ஆனால் அப்படத்தை இயக்கிய அட்லி அடுத்த படம் இயக்குவதில் குழப்ப நிலை நீடித்து வருகிறது. ஜூனியர் என்டிஆர், ஷாருக்கான் படம் இயக்குவார் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக மும்பை சென்று ஷாருக் கானை சந்தித்து பேசிய அட்லி, விஜய் நடித்த மெர்சல் படத்தை இந்தியில் இயக்கவிருப்பதாகவும் அதில் ஷாருக்கான் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இதற்கிடையில் அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறனும் ஷாருக்கானை சந்தித்தார். இதனால் ஷாருக்கான் படத்தை இயக்கப்போவது அட்லியா, வெற்றிமாறனா என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் பாலிவுட் இரட்டை இயக்குனர்கள் ராஜ், டீகே (ராஜ் நிடுமொரு, கிருஷ்ணா டி.கே) படத்தில் நடிக்க ஷாருக் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

Tags :
× RELATED சிறகன் விமர்சனம்