×

கிளிசரின் போடாமல் கார்த்தியால் அழ முடியும் என்னால் முடியாது - சூர்யா

முதல்முறையாக ஜோதிகா, கார்த்தி இருவரும் அக்கா, தம்பி வேடத்தில் நடித்துள்ள படம், தம்பி. பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். மற்றும் சவுகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஆர்.டி.ராஜசேகர். இசை, 96 கோவிந்த் வசந்தா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

சூர்யா பேசுகையில், ‘சத்யராஜ், ஜோதிகா, கார்த்தி, ஜோதிகாவின் தம்பி தயாரிப்பாளர் சூரஜ் என்று அனைவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். கார்த்தியும், ஜோதிகாவும் சிறந்த  நடிகர்கள். கிளிசரின் போடாமல் என்னால் அழ முடியாது.

ஆனால், கிளிசரின் போடாமலேயே கார்த்தி அழுதுவிடுவார். இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு எனது முக்கிய வேண்டுகோள். எவ்வளவு  அவசரம் இருந்தாலும், அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். விடியற்காலை 3 அல்லது 4  மணிக்கு பயணம் செய்வதால், சில தவறான சம்பவங்கள் நடந்துவிடுகிறது’ என்றார்.

Tags : Karthi ,Surya ,
× RELATED பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி