ஹீரோ ஆனார் சரவணன்

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்தப்படத்தில் சரவணனுக்கு கதாநாயகியாக மிஸ் இந்தியா பட்டம் பெற்ற வட இந்திய மாடல் கீத்திகா திவாரி நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜேடி - ஜெர்ரி படத்தை இயக்குகின்றனர். சரவணா ஸ்டோர் தயாரிக்கின்றது. முக்கிய வேடங்களில் பிரபு, விவேக் நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஒளிப்பதிவை வேல் ராஜ் கவனித்துக் கொள்கிறார்.

Tags : Saravanan ,hero ,
× RELATED விவசாயிகளை கேட்காமல் நிலங்கள் திடீரென பறிப்பு: அ.சரவணன், தொமுச நிர்வாகி