×

சர்ச்சை இயக்குனருக்கு தணிக்கையில் கெடுபிடி

இயக்குனர் ராம் கோபால் வர்மா படம் என்ற முத்திரை ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த சில வருடங்களாக அவர் சர்ச்சை நாயகன் ஆகிவிட்டார். அமிதாப்பச்சன், ரஜினி முதல் அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள் வரை பலரைப்பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் சொல்லி பிரச்னைகளுக்குள் சிக்கி வருகிறார். தனது படங்களையும் சர்ச்சை களத்துடன் கூடிய கதைகளாக இயக்குகிறார். வர்மா இயக்கும் புதிய தெலுங்கு படத்துக்கு கம்மா ராஜயம்லோ கடப்பா ரெட்டிலு என டைட்டில் வைத்திருந்தார்.

இதற்கு இரு சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.  டைட்டிலை எதிர்த்து பல வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து படத்தை கவனமாக பார்த்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று  கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி படத்தை கவனமாக பார்த்த தணிக்கை குழுவினர் பல்வேறு காட்சிகளை நீக்கும்படி கூறியதுடன் பல காட்சிகளை மாற்றி அமைக்கும்படி வர்மாவிடம் கூறினர்.

அதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து தணிக்கை சான்றிதழ் கேட்டு ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல விருப்பதாக வர்மா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் இரண்டு சமூகத்தினர் பற்றிய பிரச்னைகள் பேசப்பட்டிருப்பதுடன், ஆந்திர மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பவன் கல்யாண் போன்றவர்களை தவறாக சித்தரித்து காட்டப்பட்டிருக்கிறதாம்.

Tags : controversy director ,
× RELATED விவசாய வர்த்தக சட்டங்கள் சர்ச்சை...