×

டம்மி ஜோக்கரில் ஒரே சாயலில் 22 நடிகர்கள்

வடிவேலு போலவும், யோகிபாபு, சூரிபோலவும் ஒரே சாயலில் இருப்பதாக அவ்வப்போது இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியாகின்றன. டம்மி ஜோக்கர் என்ற படத்தில் பிரபலமான 22 நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்கள் நடித்திருக்கின்றனர். இதுபற்றி படத்தை இயக்கி தயாரித்து ஹீரோவாக நடிக்கும் செந்தில்குமாார் கூறியது: 22 வருடங்களுக்கு முன் காணாமல்போன தந்தையை தேடி கிராமத்துக்கு வருகிறான் வாலிபன் ஒருவன். ஊர் மக்கள் அங்கிருக்கும் பேய் பங்களாவை காட்டுகின்றனர்.

அங்கு புதையல் இருப்பதாக வாலிபன் கதைகட்டிவிட ஊர்மக்கள் அத்தனைபேரும் புதையலை தேடி பங்களாவுக்குள் நுழைகின் றனர். உடனே கதவு மூடிக்கொள்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. இதில் பிரபலமான நடிகர்கள்போல் உருவ ஒற்றுமை உள்ள 22 பேர் நடிக்கின்றனர். அவர்கள் அடிக்கும் லூட்டி காமெடியின் உச்சமாக இருக்கும். நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஆலன் பிரகாஷ் இசை. திருப்பதி ஆர்.சாமி ஒளிப்பதிவு. வினோநாகராஜன் கதை எழுதி உள்ளார்.

Tags : Dummy Joker ,actors ,
× RELATED நடிகர் சங்க பிரச்சனையில் இரு...