×

தனுசு ராசி நேயர்களே அடல்ட் காமெடி படம் இல்லை

ஹரீஷ்  கல்யாண், திகாங்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான் நடித்துள்ள படம், தனுசு ராசி நேயர்களே. இப்படத்தின் டீசரில் லிப்லாக் முத்தக்காட்சி, ஹீரோயின் மது அருந்தும் காட்சிகள் இடம்பெற்று இருந்ததால், இது அடல்ட் காமெடி படம் என்று தகவல் வெளியானது. இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறியதாவது: ராசியை நம்பும் ஹீரோ, ராசியை நம்பாமல் சாதிக்க துடிக்கும் ஹீரோயின்.

இவர்களுக்கு இடையே மலரும் காதலை பற்றி சொல்லும் படம் இது. டீசரில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து, இது அடல்ட் காமெடி படம் என்று முடிவு செய்வது தவறு. ராசி பார்த்தால் மட்டும் போதாது. கடுமையான உழைப்பும், முயற்சியும் முக்கியம் என்று படத்தில் சொல்லி இருக்கிறோம்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!