×

பேஸ்புக் மூலம் ஹீரோயினான நிம்மி

கார்த்திகேயன் இயக்கத்தில் நாளை ரிலீசாகும் மேகி என்ற படத்தில், 2 ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார் நிம்மி. அவர் கூறுகையில், ‘பேஸ்புக் மூலம் கிடைத்த வாய்ப்பு இது. இயக்குனரும், தயாரிப்பாளருமான கார்த்திகேயன் என்னை தேர்வு செய்தார். இவ்வளவு சுலபமாக வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகமாக இருந்தது.  ஒரு வாரத்தில் படப்பிடிப்பு என்றார்.

அதையும் நம்ப முடியவில்லை. பிறகு  ஒருவழியாக சம்மதித்து படப்பிடிப்புக்கு சென்றேன். முதல்நாள் படப்பிடிப்பில், ‘படத்தை எடுத்து முடித்து வெளியிடுவீர்களா?’ என்று கேட்டேன். இப்படி நான் கேட்டிருக்க கூடாது என்றாலும், திட்டமிட்டபடி படத்தை முடித்து நாளை ரிலீஸ் செய்கிறார்கள். காமெடி, திகில் கலந்த பேய் படமாக  மேகி உருவாகியுள்ளது’ என்றார்.

Tags : Heroine Nimmy ,
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்