×

சுருட்டு பிடிக்கும் சுமா

90களில் புதுபாட்டு, பெரும்புள்ளி, மாநகர காவல், குறும்புக்காரன், மேட்டுப்பட்டி மிராசு போன்ற படங்களில் ஹீரோவுடன் லவ் டூயட் பாடிக்கொண்டிருந்தவர் சுமா ரங்கநாத். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆரம்பம் படத்தில் நடித்தார். தற்போது கொள்ளை கூட்டத் தலைவியாக சுருட்டு பிடித்தபடி ரவுடித்தனம் செய்பவராக நடிக்கும் படம் தண்டுபாளையம். கே.டி.நாயக் இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குனர் நாயக் கூறும்போது,’இது முழுக்க உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட கதை. 1990களில் கர்நாடகத்தில் தண்டுபாளையம் என்ற ஊரில் உருவான ஒரு கொள்ளை கூட்டம் ஆசியாவிலேயே கொடூர கும்பலாக மாறியது. அந்த சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

கொள்ளை கூட்ட தலைவியாக நடிக்கிறார் சுமா ரங்கநாத். மேலும் முமைத்கான், பேனர்ஜி, ராக்லைன் சுதாகர், வெங்கட், ஜீவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்.கிரி ஒளிப்பதிவு. ஆனந்த் ராஜா விக்ரம் இசை. வெங்கட் தயாரிப்பு. கிருஷ்ணமூர்த்தி வசனம். வரும் டிசம்பரில் தமிழ், மலையாளம், இந்தி, போஜ்புரி, மராட்டி என 10 மொழிகளில் இப்படம் வெளியாகிறது’ என்றார்.

Tags : Suma ,
× RELATED முன்விரோத தகராறில் பெண்ணை சரமாரி தாக்கிய 2 பேர் கைது