ஹரிஷ் - திகங்கனா காதல் மோதல்

பியார் பிரேமா காதல் படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் அடுத்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான், ரியா சக்ரவர்த்தி நடிப்பதாக இருந்தது திடீர் மாற்றமாக ரியாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி நடிக்க ஒப்பந்தம் ஆனார். படம் பற்றி இயக்குனர் சஞ்சய் கூறும்போது,’கதைப்படி ஹீரோ ஹரிஷ் கல்யாண் ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர். தனுசு ராசிக்காரரான அவர் தனக்கு ஏற்ற பெண்ணை தேடி அலைகிறார்.

செவ்வாய் தோஷ பெண் என்றால் அவருக்கு பயம், ஆனால் திகங்கனா செவ்வாய் கிரகத்துக்கு போக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒரு பெண். இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் ருசிகரமான காதல், மோதல்தான் கதை. குடும்பபாங்காக உருவாகியிருக்கும் இப்படத்தில் முனிஷ்காந்த், யோகி பாபு, பாண்டியராஜன், சார்லி, ரேணுகா, மயில்சாமி, சங்கிலி முருகன், டேனியல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு. ஜிப்ரான் இசை’ என்றார்.

Related Stories: