×

பேட்மின்டன் வீராங்கனை நடிகைக்கு காயம்

பேட்மின்டன் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்திருக்கும் சாய்னா நேவால் வாழ்க்கை திரைப்படமாகிறது. சாய்னா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ரா நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக அவர் கடந்த 4 மாதம் பேட்மின்டன் பயிற்சி பெற்றார். இதையடுத்து அப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். மும்பையில் உள்ள ராம்ஷத் தாகூர் சர்வதேச விளையாட்டு வளாகத்தில் உள்ள மைதானத்தில் படப்பிடிப்பு நடந்தது. பேட்மின்டன் விளையாடும் காட்சியில் நடித்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு பிசியோதெரபி டாக்டர் சிகிச்சை அளித்தார். டாக்டரிடம் சிகிச்சை பெறும் வீடியோவை பரிணிதி சோப்ரா வெளியிட்டிருக்கிறார். விரைவில் குணம் அடைந்து படப்பிடிப்பில் பங்கேற்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் சாய்னாவை அவர் விரைவில் ஐதராபாத் வந்து நேரில் சந்தித்து பேட்மின்டன் விளையாட்டின் டெக்னிக் பற்றி ஆலோசனை பெற்று அதை படத்தில் பயன்படுத்த எண்ணி உள்ளார்.

Tags : actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...