×

ஷாருக்கானுடன் 3 படம் இயக்கும் அட்லி

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் அட்லி. கடைசியாக இவர் இயக்கிய பிகில் கடந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதையடுத்து ஷாருக்கான் படம், ஜூனியர் என்டிஆர் படத்தை அட்லி இயக்கப்போவதாக தகவல் பரவியது.

சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். அதில் அட்லி தனது மனைவியுடன் கலந்துகொண்டார். அப்போது ஷாருக்கான், அட்லிக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஷாருக் தயாரிக்கும் 3 படங்களை இயக்க அட்லி ஒப்புக்கொண்டாராம். இதில் ஒரு படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

அட்லி இந்தியில் பிஸியாவதால் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இப்போதைக்கு இயக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ஷாருக்கானை, அரசுன் பட இயக்குனர் வெற்றிமாறனும் சந்தித்து பேசினார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஷாருக், அசுரன் படம் நன்றாக இருந்தாக அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

Tags : Atty ,Shahrukh Khan ,
× RELATED 17ம் ஆண்டு நினைவுநாள் முரசொலிமாறன் படத்திற்கு திமுகவினர் மரியாதை