×

ஹாட் ஹீரோயினாகும் நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிறு பிடிச்சவன், சங்கத்தமிழன் படங்களில் நடித்தி ருக்கிறார் நிவேதா பெத்துராஜ். நடிப்பை பொறுத்தவரை நல்ல பெயர் வாங்கியிருந் தாலும் மார்க்கெட் நிலவரம் என்னவோ நிவேதாவுக்கு டல்லாகவே இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் சித்ரலஹரி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. படம் வெளி யாகி சூப்பர் ஹிட்டானது அடுத்து புரோசேவரெவருரா படத்தில் நடித்தார் அப்படம் ஹிட்டானது. இதையடுத்து நிவேதாவுக்கு டோலிவுட்டில் மவுசு கூடியிருக்கிறது.

தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த காஜல் அகர்வால், நயன்தாரா, தமன்னா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் சமீபகாலமாக குறைந்த எண்ணிக்கையிலான படங்களி லேயே நடிக்கின்றனர். மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் தற்போதைக்கு இந்தி படத்தில் கவனம் செலுத்துவதால் டோலிவுட்டில் போட்டி குறைந்திருக்கிறது.

அந்த வாய்ப்புகளை தற்போது நிவேதா, ராஷ்மிகா, ராசி கண்ணா, சாய் பல்லவி போன்றவர்கள் பகிர்ந்து வருகின்றனர். டோலிவுட்டில் ஜீரோவிலிருந்து தொடங்கி தற்போது முன்னணி நடிகைகள் ரேஸில் இணைந்திருக்கும் நிவேதா பெத்துராஜ் அங்கு ஹாட் ஹீரோயினாக மாறிக்கொண்டிருக்கிறார். அல்லு அர்ஜூன் நடிக்கும் அல வைகுந்தபுரமலோ, ராம் நடிக்கும் ரெட் போன்ற பெரிய ஹீரோக்கள் படங்களில் தற்போது ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

Tags : Nivetha Bethuraj ,
× RELATED நலம் கொண்ட நாயகி