×

டிஜிட்டல் வில்லியாகிறார் சமந்தா

திரைப்படங்கள் இப்போது டிஜிட்டல் மயத்துக்கு மாறிவிட்டதுபோல் வெப் சீரிஸும் அந்த பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. ராதிகா ஆப்தே, நித்யா மேனன், பிரியாமணி உள்ளிட்ட நடிகைகள் வெப் சீரிஸில் நடிக்கின்றனர். நடிப்பு எந்த ரூபத்தில் இருந்தாலும் சம்பளம் என்னவோ லட்சகங்கள், கோடிகளில் கிடைக்கும்போது எதற்காக பாகுபாடு என்று முன்னணி நடிகைகளும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

நடிகை சமந்தா, ‘தி பேமலி மேன்’ என்ற வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் சமந்தாவை ஐதராபாத்தில் சந்தித்த இந்த படக்குழு, அவரிடம் ஸ்கிரிப்டை விளக்கினார்கள்.

அது சமந்தாவுக்கு பிடித்திருந்தது. எதிர்மறை அதாவது வில்லித்தன மான கதாபாத்திரத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது. அதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதுபற்றி சமந்தா கூறும்போது,’ரசிக்கும்படியான வித்தியாசமான கதாபாத்திரங்களை  ஒப்புக்கொள்வதில் எனக்கு ஆட்சேபனை கிடையாது. டிஜிட்டல் உலகில் ஸ்கிரிப்ட் தான் ராஜா’ என்றார்.

Tags : Samantha ,villain ,
× RELATED நயன்தாரா படத்திலிருந்து சமந்தா விலகல்