×

மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி

மிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்தில், முதல்முறையாக பார்வையற்றவர் வேடத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து அவர் கூறுகையில், ‘படம் முழுவதும் கருப்புக் கண்ணாடியை கழற்ற மாட்டேன். இயக்குனர் மிஷ்கின் கொடுத்த ஐடியா இது. நடிக்கும்போது கண்களில் அணிவதற்காக, மும்பையில் இருந்து வாங்கிய விசேஷ கான்டாக்ட் லென்ஸ் அணிந்தேன்.

பிறகு கருப்புக் கண்ணாடியை கழற்றாததால், லென்ஸ் அணிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஹீரோயின்களாக நித்யாமேனன், அதிதி ராவ் ஹைதரி நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 27ம் தேதி படம் வெளியாகிறது. இதையடுத்து, மகிழ்திருமேனி இயக்கும் புதுப்படத்தில் நடிக்கிறேன். மாறன் இயக்கத்தில் நான் நடிக்கும் கண்ணை நம்பாதே என்ற படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது’ என்றார்.

Tags : Udayanidhi ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி