×

ரூ.144 கோடிக்கு நவீன வசதிகளுடன் பங்களா வாங்கிய பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா இந்தி ஹாலிவுட் படங்களில் நடித்தாலும் முதலில் அவர் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில்தான் அறிமுகமானார். 2002ம் ஆண்டு வெளியான இப்படத்தில பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மஜீத் இயக்கினார். பின்னர் இந்திக்கு சென்றவர் அங்கு தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ஏராளமான படங்களில் நடித்த பிரியங்கா ஹாலிவுட் குவான்டிகோ என்ற ஹாலிவுட் சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

இந்நிலையில் அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அமெரிக்காவில் செட்டிலானார். தனக்கென ஒரு கனவு இல்லத்தை அமெரிக்காவில் வாங்க முடிவு செய்த பிரியங்கா அதற்காக ஆடம்பர பங்களாவை தேடி வந்தார். அதற்கு பலன் கிடைத்தது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள பங்களாவை வாங்கினார்.

அமெரிக்க மதிப்பில் 20 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கிய இந்த பங்களாவின் இந்திய மதிப்பு ரூ.144 கோடி. சினிமா தியேட்டர், பார், ரெஸ்டாரண்ட், கூடைபந்து விளையாட்டுக்கான இன்டோர் ஸ்டேடியம், ஜிம், 7 பெட்ரூம், 11 பாத்ரூம், நீச்சல் குளம், பவுலிங் அரங்கம் 20க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்த கார்பார்க்கிங் உள்ளிட்ட தடபுடல் வசதிகளுடன் இந்த பங்களா அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags : Priyanka Chopra ,facilities ,
× RELATED பிரியங்கா சோப்ராவின் ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை