×

நிதி அகர்வால் காதல் என்னாச்சு

தமிழில் ஜெயம் ரவியுடன், பூமி படத்தில் நடிக்கிறார் நிதி அகர்வால். இவர் ஏற்கனவே, ‘முன்னா மிச்சல்’ இந்தி படத்தில் நடித்ததுடன் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இணைய தளத்தில் சில நடிகைகள் தங்களது புகைப்படங்களை வித்தியாசமாக வெளியிட வேண்டும் என்பதற் காக மெனக்கெடுகின்றனர். யோகாசனம், ஜிம்மில் செய்யும் பயிற்சி, வெளி நாட்டில் சுற்றித்திரிவது போன்ற பல படங்கள் வெளியிடுகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் நிதி அகர்வால். இணைய தளத்தில் கவர்ச்சி  படங் களை வெளியிட்டே பட வாய்ப்பு பெற்றவர் என்று கூட இவரைப்பற்றி சொல்வதுண்டு.

தற்போது வித்தியாசமான படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதி. சுவற்றில் வரையப்பட்ட மெகா சைஸ் விரல்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டி ருப்பதுபோல அப்படம் இருந்தாலும் கவர்ச்சி தூக்கலான பிங்க் நிற ஸ்கர்ட் அணிந்து முகத்தில் பளிச்சென புன்னகையுடன் போஸ் தந்திருக்கிறார். இவர் எற்கனவே கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் உடன் இணைத்து கிசுகிசுக்கப் பட்டார். சில இடங்களில் இருவரையும் ேஜாடியாக பார்க்க முடிந்தது.  தற்போது இவர்களுக்குள்ளான நெருக்கம் என்னாச்சு என்று தெரியவில்லையாம்.

Tags : Agarwal ,
× RELATED தீபாவளி பண்டிகையின் போது குற்ற...