×

கீர்த்தி நடிக்கும் கால்பந்து விளையாட்டு கதை

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து சமீபத்தில் திரைக்கு வந்தது விஜய் நடித்த பிகில் படம். தற்போது இந்தியில் ஒரு கால்பந்து விளையாட்டு கதை உருவாகிறது. இது பிகில் ரீமேக் இல்லை. ஆனால் பிரபல கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிம்மின் வாழ்க்கை தழுவி உருவாகிறது. இப்படத்திற்கு மைதான் என பெயரிடப்பட்டிருக்கிறது. 1950 முதல் 1963 வரை இந்திய கால்பந்து அணி படைத்த சாதனைகளை சொல்லும் கதையாக உருவாகும் இதில் அஜய்தேவ்கன், கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இப்படம் மூலம் இந்தி திரையுலகில அறிமுகமாகிறார் கீர்த்தி. அமித் சர்மா இயக்குகிறார்.

தமிழில் அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை, தற்போது நடிக்கும் வலிமை ஆகிய படங்களை தயாரித்துள்ள போனிகபூர், மைதான் படத்தை தயாரிக்கிறார். இப்படம் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி திரைக்கு வரும் என இயக்குனர் அமித் சர்மா டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Tags : football game ,Keerthi ,
× RELATED கஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்