×

வித்தியாசமான கதை இருந்தா வாங்க... சமந்தா சொல்கிறார்

நடிகை சமந்தா முன்னணி, இளம் ஹீரோக்கள் என பாரபட்சம் பார்க்காமல் சகட்டுமேனிக்கு படங்களில் நடித்து தள்ளினார். திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. நடிப்பிலிருந்து சில காலம் ஒதுங்கியிருக்க எண்ணி யிருந்த நிலையில் தவிர்க்க முடியாத சில படங்கள் வந்ததால் ெதாடர்ந்து நடித்து வருகிறார். இனியும் தொடர்ந்து நடிப்பேன் ஆனால் என்று... பேச்சை முடிக்காமல் தொடர்கிறார்.

சமந்தாவுக்கு அம்மா ஆகும் ஆசை வந்தாலும் பட வாய்ப்புகள் அவரை ஷூட்டிங் தளத்திலேயே கட்டிப்போட்டு வைத்திருக்கிறதாம். சமீபகாலமாக சில வழக்கமான பார்முளா கொண்ட படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை உதறி தள்ளினார். அத்துடன் ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் கதைகளையும் ஏற்க மறுக்கிறார். அதற்கு காரணம் யாரும் புதிதாக, வித்தியாச மான ரோல்பற்றி சொல்லாததால் ஏற்க மறுத்துவிடுகிறாராம். இயக்குனர்களும், எழுத்தாளர்களும் வழக்கமான பாணியிலிருந்து வெளியில் வந்து வித்தியாச மான கதைகளை யோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் சமந்தா. சில இளம் இயக்குனர்கள் சமந்தாவிடம் கதை சொல்லியிருக்கின்றனர். அதில் நடிப்பதுபற்றி யோசித்து வருகிறார்.

Tags : Samantha ,
× RELATED பீரியட் கதையில் டாப்ஸி