×

கல்யாண மூடில் காஜல்: அஜ்மீர் தர்காவில் தொழுகை

நடிகை காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ் தான் சென்றார். கமலுடன் காஜல் அகர்வால் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப் பட்டது. படப்பிடிப்பு முடிந்து இடைவேளை கிடைக்கும் நேரத்தில் ராஜஸ்தானை சுற்றி வந்தார். அங்குள்ள அழகிய அரண்மனைகளை, சரித்திர புகழ்பெற்ற இடங்களை கண்டு ரசித்தார்.  பின்னர் அஜ்மீர் தர்காவுக்கு தனது தாயுடன் சென்று சிறப்புத் தொழுகை செய்தார். முன்னதாக காஜல் அகர்வால் அங்குள்ள வழக்கப்படி மலர் கூடையை  தலையில் சுமந்த படி, கொண்டு சென்று மலர்களை இறைவனுக்கு படைத்தார்.

காஜலை, தர்கா மூத்த நிர்வாகிகள் வரவேற்றதுடன் வெல்வெட் போர்வையும், பிரசாதமும் அளித்தனர். சமீபத்தில் பேட்டி அளித்த காஜல் அகர்வால் விரைவிலேயே தனது திருமண அறிவிப்பை வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார். தனக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும் என்ற வேண்டுதலையும் மனதில் வைத்தே தர்காவுக்கு சென்றாராம்.

Tags : Kajal ,Ajmer Dargah ,
× RELATED நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்