அநாகரீக கருத்து: குஷ்பு கோபம்

நடிகை குஷ்பு டிவிட்டர் பக்கத்தில் உடனுக்குடன் தனது கருத்துக்களை பகிர்ந்து வந்தார். அரசியல், பொது விஷயங்கள் குறித்தும் துணிச்சலாக பேசி வந்தார். ஆனாலும் அடிக்கடி சிலர் அவரிடம் வம்பு செய்யும் விதமாக ஏடாகூடமாக கேள்வி கேட்டு தொல்லை கொடுத்தனர். அதற்கும் அவர் சரியான பதிலடி கொடுப்பது வழக்கம். சமீபத்தில் தனது மகள் பற்றி யாரோ ஒருவர் விமர்சனம் செய்ய அதைக் கண்டு கோபம் அடைந்து பதில் தந்தார். அதற்கு பிறகும் அவர் வழக்கம்போல் தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் திடீரென்று டிவிட்டர் பக்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,’ஆரம்பத்தில் நிறைய நல்ல விஷயங்கள் பகிரப்பட்டன. அதைக்கண்டு நானும் எனது கருத்துக்களை பதிவிட ஆர்வமாக இணைந்தேன். ஆனால் சமீபகாலமாக சிலர் அநாகரீகமான கருத்துக்களை வெளியிடுகின்றனர். நெகடிவான விஷயங்கள் அதிகம் வருகிறது. எனவேதான் டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து இருக்க விரும்பாமல் விலகுகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார் குஷ்பு.

Tags :
× RELATED முரசொலி நிலம் குறித்து கருத்து...