×

கவர்ச்சியை திடீரென அதிகரித்த தமன்னா

ஹீரோயின்கள் திடீரென சம்பளத்தை அதிகரிப்பதுண்டு சிலசமயம் கவர்ச்சியையும் அதிகரிக்கின்றனர். தமன்னாவை பொறுத்தவரை கவர்ச்சி காட்டுவதில் ஒரு எல்லைக்கு மேல் செல்லாமல் கட்டுப்பாடுடன் நடித்து வருகிறார். அதேபோல் லிப் டு லிப் முத்தக் காட்சிகளுக்கும் நோ சொல்கிறார். சமீபகாலமாக கோலிவுட் படங்களில் கவர்ச்சியும், முத்தக்காட்சிகளும் அதிகரித்து வருகின்றன. அதை புரிந்துகொண்ட தமன்னா தன்னை அதற்கேற்ப மாற்றிக்கொண்டிருக்கிறார்.

இணைய தள பக்கத்தில் தமன்னா தனது படங்களை வெளியிட்டாலும் அதில் கவர்ச்சி அளவுடன் இருக்கும். கடந்த 2 நாட்களாக அவர் எல்லை மீறி கவர்ச்சி காட்டத் தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. திரையுலகுக்கு வந்து 15 வருடம் ஆன நிலையில் இன்னமும் தமன்னா தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். புது ஹீரோயின்கள் வருகையால் 10 வருடம் கடந்த நடிகை களின் மார்க்கெட் சற்று ஆட்டம் காணத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்துக்கு வந்திருக்கின்றனர். காஜல் விரைவில் திருமணம் செய்வேன் என ஏற்கனவே அறிவித்திருக்கிறார். நயன்தா ராவுக்கு திருமண பிரஷர் அதிகரித்திருக்கிறது. அந்த வரிசையில் தமன்னா அடுத்த வருடம் திருமணம் செய்வார் என்று கூறப்படுகிறது.

Tags : Tamanna ,
× RELATED ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் விராட்...