×

நடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஷால்

சுந்தர்.சியின் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா புரி நடித்துள்ள படம், ஆக்‌ஷன். வரும் 15ம் தேதி ரிலீசாக உள்ள இப்படம் குறித்து விஷால் கூறியதாவது: எனது சினிமா கேரியரில் அதிகமான சண்டைக் காட்சிகள் இடம்பெற்ற படமும், நான் அதிகமாக அடிபட்ட படமும் ஆக்‌ஷன்தான். சண்டைக் காட்சியில் நடித்தபோது, என் மரணத்தை கண் முன்னால் பார்த்தேன்.

வெளிநாட்டில் பைக்கில் வேகமாக நான் செல்லும்போது, ஒரு ஷாட்டில் என் கைகளை வைத்து தடுக்க வேண்டும். அப்போது கையிலும், காலிலும் அடிபட்டது. தொடர்ந்து சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்ைல. அவ்வளவுதான், இனி நான் காலி என்று நினைத்தேன். ஆனால், கடவுள் ஆசியால் மீண்டும் வந்து நடித்தேன்.

சினிமா படம் இயக்குவது தொடர்பாக, ஒரு உதவி இயக்குனரை போன்று சுந்தர்.சியிடம் பணியாற்றி நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். சண்டைக் காட்சியில் எனக்கும், தமன்னாவுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. இதுவரை பெண்களை நான் அடித்தது இல்லை. படத்தில் வரும் சண்டைக் காட்சியில் அகன்ஷா புரியை பலமுறை அடித்து விட்டேன். அதற்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

Tags : Vishal ,actress ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கு விசாரணை...