×

பாலிவுட்டில் வேதிகா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள வேதிகா, தற்போது பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகிறார். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள அப்படத்துக்கு, தி பாடி என்று பெயர். மார்ச்சுவரியில் இருந்து ஒரு சடலம் திடீரென்று காணாமல் போகிறது.

அதை தேடும் பணியில் போலீசார் ஈடுபடும்போது, பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிறது. எல் க்யூர்போ என்ற ஸ்பானிஷ் திரில்லர் படத்தின் ரீமேக்காக இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வேதிகா, இம்ரான் ஹாஸ்மி, ரிஷிகபூர், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13ம் தேதி படம் ரிலீசாகிறது.

Tags : Vedika ,
× RELATED பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம்...