×

நான் படம் இயக்கவில்லை - சாயாசிங்

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் போஜ்புரி, பெங்காலி மொழி படங்களில் ஹீரோயினாக நடித்த சாயாசிங், பிறகு சில படங்களில் ஒரு பாடல் காட்சிக்கு நடனம் ஆடினார். டி.வி நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் சினிமா படம் இயக்கியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கூறுகையில், ‘தனியாக படம் இயக்கும் அளவுக்கு இன்னும் நான் தகுதி பெறவில்லை.

நான் நடித்த சில படங்களின் படப்பிடிப்பில், ஒரு உதவி இயக்குனரை போல் பணியாற்றி சில விஷயங் கள் கற்றுக்கொண்டேன். கதை எழுதி வைத்துள்ளேன். எப்போது படம் இயக்குவேன் என்று தெரியவில்லை. தற்போது தமிழரசன், ஆக்‌ஷன், மகா ஆகிய படங்களில் நடிக்கிறேன். தொடர்ந்து தமிழில் நடிப்பதற்காக சென்னையிலேயே குடியேறி விட்டேன்’ என்றார்.

Tags :
× RELATED ஷாருக்கான் படத்தில் சல்மான்கான்