×

பட்டதுபோதும்... மீண்டும் காதல் தேவையில்லை : இலியானா

நடிகை இலியானா வெளிநாட்டு பாய்பிரண்ட் ஆண்ட்ரு நிபோன் என்பவரை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. லவ் பிரேக் அப் செய்துகொண்டு காதலனை விட்டு விலகினார். இலியானாவுடனே லிவிங் டு கெதராக வாழ்ந்து  வந்த காதலனும் அவரை விட்டு பிரிந்து சென்றார். காதலனை பிரிந்ததிலிருந்து சோகமாகவே சுற்றிக் கொண்டிருந்தார் இலியானா. சிலர் அறிவுறுத்தியதன் பேரில் டாக்டரிடம் சென்று மனநல சிகிச்சை பெற்றார்.

அதன்பிறகு உற்சாகம் அடைந்தார். இதுகுறித்து இலியானா கூறியதாவது: லவ் பிரேக் அப்பிற்கு பிறகு எனது நிலையை பார்த்தவர்கள் என்னை மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ள  அட்வைஸ் செய்தனர். அதன்படி டாக்டரை சந்தித்தேன். அவர் அறிவுரை தந்தார். உன் மீது மற்றவர்கள் கூறும் புகார்கள் உண்மையென்றால் ஏற்றுக்கொள், அப்போதுதான் பிரச்னையிலிருந்து நீ வெளியில் வந்து உன்னை நீயே அறிய முடியும் என்றார்.

அவர் சொன்னது உண்மை. என் மீதான குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக்கொண் டபிறகு எனக்குள் இருந்து என்னையே நான் கண்டுபிடித்தேன். அது பெரிய சுகத்தை தந்திருக்கிறது. தற்போது மனம், எண்ணம் மற்றும் உடல் அளவில் எனக்குள் பெரிய வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன். கெட்ட நேரம் வந்தால் அதை எதிர்கொண்டு சரிசெய்ய நமக்கு நாமே முயல வேண்டும் என்பதும் புரிந்தது. நமக்கு ஒரு காதலன் இருப்பது அமைதியையும் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது.

ஆனால் அதைவிட நமது மனநிலை மிக முக்கியம். நான் மீண்டும் காதலுக்கு தயாரில்லை. தற்போது இருக்கும் நிலையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு ஒரு பாடம். யாரிடமும் நான் கசப்பு உணர்வோ, எதிரான உணர்வையோ காட்ட விரும்பவில்லை. அத்தகைய எண்ணங்கள் என்னைவிட்டு உறுதியாக சென்றுவிட்டது. தவறான ஒரு சம்பவம் நடந்து விட்டது. ஆனாலும் வாழ்க்கை தொடர்கிறது. அவரை (காதலன்) பற்றி நான் தவறாகவோ சாபமிடுவதையோ விரும்பவில்லை. நான் நல்ல இடத்திலிருக்கிறேன். அதேபோல் அவரும் இருக்க வேண்டும். இவ்வாறு இலியானா கூறினார்.

Tags : Illyana ,
× RELATED இடுப்பு காட்டி அசத்திய இலியானா சிரிப்பு காட்டி பயமுறுத்துகிறார்