×

சிறுவனை திட்டிய தனுஷ் பட நடிகை : புகாரால் மன்னிப்பு கேட்டார்

தனுஷ் நடித்த அம்பிகாபதி படத்தில் துணை நடிகையாக நடித்தவர் ஸ்வாரா பாஸ்கர். மும்பையில் நடந்த காமெடி டாக் ஷோவில் தனது திரையுலக அனுபவத்தை தெரிவித்தார். அப்போது, ‘விளம்பர பட ஷூட்டிங் ஒன்றில் பங்கேற்றபோது 4 வயது சிறுவனும் என்னுடன் நடித்தான். திடீரென்று என்னை பார்த்து ஆன்ட்டி என்று சிறுவன் கூறினான். அதைக்கேட்டதும் கோபம் வந்துவிட்டது.

யாரைப்பார்த்து ஆன்ட்டி என்று சொன்னே எனக்கேட்டு அவனை ஆபாசமாக திட்டிவிட்டேன்’ என்றதுடன் திட்டிய அந்த வார்த்தைகளையும் ஷோவில் கூறினார். ஸ்வாரா பாஸ்கரின் பேச்சு அவரை வம்பில் மாட்டிவிட்டிருக்கிறது. ஆன்ட்டி என்றதற்காக 4 வயது சிறுவனை கெட்ட வார்த்தையாலா திட்டுவது என நெட்டிசன்கள் கண்டித்தனர்.

மேலும் சிறுவனை ஆபாசமாக திட்டிய விவகாரம் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையத்திடம் புகார் கொடுத்து ஸ்வாரா பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியது. இதையடுத்து, ‘ஏதோ கோபத்தில் பேசிவிட்டேன். யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும்’ என தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஸ்வாரா.

Tags : Dhanush: Actress ,Dhanush ,
× RELATED சென்னையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்