×

புலனாய்வு திரில்லர் லாக்கப்

நடிகரான நிதின் சத்யா தயாரித்துள்ள படம் லாக்கப். இந்த படத்தை புதியவர் சார்லஸ் இயக்கியுள்ளார். இந்த படம் புலனாய்வு திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் வைபவ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் அறிமுகம் ஆகிறார். முக்கிய வேடத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு நடிக்கிறார்.

அவருக்கும் போலீஸ் அதிகாரி வேடம் தரப்பட்டுள்ளது. பூர்ணா, ஈஸ்வரிராவ் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். ஆரோல் கரோலி இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து டப்பிங் பேசும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Intelligence thriller lockup ,
× RELATED பொன்மகள் வந்தாள் போலி வெப்சைட்டில் வெளியானது