×

தடயவியல் கதையில் ரெபா

விஜய்யின் பிகில் படத்தில், ஆசிட் வீச்சில் முகம் பாதிக்கப்பட்ட  கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்தவர், ரெபா மோனிகா ஜான். தற்போது அவர்  மலையாள படத்தில் நடிக்கிறார். மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள  நடிகர் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கும் படம், பாரன்சிக்.

இதில் நடிக்க ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகி இருக்கிறார். தடயவியல் குறித்த கதையுடன் உருவாகும் இதில், முக்கிய கேரக்டரில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். அகில் பால், அனாஸ் கான் திரைக்கதை எழுதி இயக்குகின்றனர். கேரளாவில் படப்பிடிப்பு  நடக்கிறது.

Tags : Reba in Forensic Story ,
× RELATED பொன்மகள் வந்தாள் போலி வெப்சைட்டில் வெளியானது