×

மத்திய அரசை விமர்சித்த ஜிப்சிக்கு ஏ

குக்கூ, ஜோக்கர் படங்களை அடுத்து ராஜு முருகன் இயக்கியுள்ள படம் ஜிப்சி. ஜீவா, புதுமுகம் நடஷா சிங் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரமோஷனுக்கான பாடல் வீடியோவில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, திருமுருகன் காந்தி உள்பட பலர் நடித்துள்ளனர். காதலுக்கு ஜாதி, மதம், அரசியல் எப்படி எதிர்ப்பாக அமைகிறது என்பதை சொல்லும் படமாக ஜிப்சி அமைந்துள்ளது.

இதில் டூரிஸ்ட் கைட் கேரக்டரில் ஜீவா நடித்துள்ளார். படத்தில் மத்திய அரசின் திட்டங்களையும் சில நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து, சான்றிதழ் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து மும்பையிலுள்ள மறு தணிக்கை குழுவுக்கு படத்தை போட்டு காண்பித்தனர். அவர்களும் மத்திய அரசை விமர்சிக்கும் காட்சிகளுக்கு தடை போடும் வகையில் பேசியுள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு படத்தில் சில இடங்களில் மட்டும் கட் கொடுத்து ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

Tags : Gypsy ,government ,
× RELATED மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில்...