×

மீண்டும் சல்மான் கானை இயக்கும் பிரபுதேவா

போக்கிரி படத்தை இந்தியில் வான்டட் பெயரில் சல்மான் கானை வைத்து இயக்கினார் பிரபு தேவா. அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்கள் இயக்குவதில் பிசியாகிவிட்டார். இந்நிலையில் நீண்ட இடைவெளி விட்டு, தபங் 3 படத்தில் சல்மான் கானை இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

தமிழ், தெலுங்கிலும் தபங் 3 டப் ஆகிறது. இதையடுத்து மீண்டும் சல்மான் கான் நடிப்பில் ராதே என்கிற படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இது ஆக்‌ஷன் திரில்லர் கதையாக உருவாகிறது. சல்மான் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்க உள்ளார்.

Tags : Prabhu Deva ,Salman Khan ,
× RELATED தினக்கூலி திரைத்துறை...