×

விஷாலுடன் மோதும் விஜய்சேதுபதி

விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் தீபாவளியையொட்டி வெளியானது. அப்படங்களின் ரிலீஸ் தினத்தன்றே விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் மோதலை தவிர்த்து நவம்பர் 15ம் தேதிக்கு சங்கத்தமிழன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி வரும் 15ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் படமும் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரட்டை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தை விஜய் சந்தர் டைரக்டு செய்திருக்கிறார். ராசி கண்ணா, நிவேதா பெதுராஜ் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். விஷாலின் ஆக்‌ஷன் படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர்.

Tags : Vijay Sethupathi ,Vishal ,
× RELATED 200 பேர் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி