×

படுக்கைக்கு அழைத்த நடிகர்; இஷாகோபிகர் பரபரப்பு புகார்

90களில் திரையுலக்கு வந்தவர் இஷா கோபிகர். என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா போன்ற படங்களில் நடித்ததுடன் இந்தியில் ருத்ராக்‌ஷ், ஹம் தும், கேர்ள்பிரண்ட், டான், ஹலோ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். பிரபல நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பரபரப்பு புகார் கூறியிருக்கிறார். மும்பையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பல சமயம் எனக்கு பட வாய்ப்புகள் வரும்போதெல்லாம் அந்த வாய்ப்பு என்னை விட்டு நழுவி வேறு நடிகைக்கு சென்றுவிடும்.

அந்த நடிகை குறிப்பிட்ட நடிகரின் உறவுப் பெண்ணாக இருப்பார். இதனால் நான் பட வாய்ப்புகளை பலமுறை இழந்திருக்கிறேன். அதற்கு பின்னணி காரணம் இருக்கிறது. தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து பிரபல நடிகரின் பெயரைச் சொல்லி, அவரிடம் பேசுங்கள் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும், அவரிடம் நல்லபெயர் வாங்கிவிட்டால் நிறைய பட வாய்ப்புகள் வரும்,  நீங்கள் பெரிய நடிகையாகிவிடலாம் என்றார். நானும் அந்த நடிகரை தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர் என்னிடம் தனது தினசரி பணிகள் பற்றி கூறினார். அதிகாலையில் எழுந்து ஜிம்மிற்கு சென்றுவிடுவேன், அதனால் டப்பிங் தியேட்டருக்கு வா அங்கு இடைவேளையில் பேசலாம் என்றதுடன், யாருடன் வரப்போகிறாய் என்றார். டிரைவருடன் வருகிறேன் என்றேன். யாருடனும் வேண்டாம் தனியாக வா. நான் ஒன்றும் 15 வயது 16 வயது பையன் இல்லை என்றார். அவர் எதற்காக என்னை தனியாக வரச்சொல்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.

உடனே நான் இன்றைக்கு வேறு வேலை இருக்கிறது அதனால் நாளை வருகிறேன் என்று சொல்லி விட்டு போன் இணைப்ைப துண்டித்துவிட்டேன்.  
நடிகரிடம் என்னை பேச சொன்ன தயாரிப்பாளருக்கு போன் செய்து, எனது திறமைக்காகத்தான் வாய்ப்பு தரவேண்டும், வேறு எதற்காகவும் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு வரும் நடிகை நான் இல்லை.

ஒரு பெண் முடியாது என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்க வேண்டும் என்று கோப மாக கூறினேன். பின்னர் ஒருபோதும் அந்த நடிகருடன் நான் நடிக்கவே இல்லை. சில சமயம் நடிகர்களின் செகரட்ரிகள் என்னை தவறான இடங்களில் தொட்டு பேசுவார்கள். அதுபோன்ற நபர்களிடமிருந்து என்னை தற்காத்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டேன். இவ்வாறு இஷா கோபிகர் கூறினார். தன்னை படுக்கைக்கு அழைத்த நடிகர் யார், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்  யார் என்பதை வெளிப்படையாக சொல்ல மறுத்துவிட்டார் இஷா.

Tags : actor ,Ishakopikar ,
× RELATED வறுமையில் வாடும் மகாபாரத நடிகர்