×

ஏமாற்றப்பட்டதால் கெடுபிடிக்காரரான நயன்தாரா

பட புரமோஷனுக்கு வருவதில்லை, கதாபாத்திரங்களில் கறார் காட்டுகிறார், பேட்டிக்கு மறுக்கிறார் என்று நயன்தாரா மீது புகார்கள் கூறப்படுகின்றன. இதுபற்றி நயன்தாரா கூறியதாவது: சினிமாவில் நடிக்க வந்தபோது இயக்குனர் சொல்வதை நடித்துவிட்டுச் சென்றேன். ஆனால் ஒரு கட்டத்தில் நான் மாற வேண்டியதாகி விட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடித்தது நான் செய்த பெரிய தவறாக உணர்கிறேன்.

அதில்  மருத்துவக்கல்லூரி மாணவியாக வேடம் தரப்பட்டது. வேடத்தை பொறுத்தவரை தவறு எதுவும் இல்லை. ஆனால் அப்படத்தில் நடிப்பதற்கு முன் என்னிடம் சொல்லப்பட்ட கதைக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை. எனது கதாபாத்திரம் பற்றி என்னிடம் சொல்லப்பட்டபடி அல்லாமல் ெதாடர்பே இல்லாமல் காட்சிகள் படமாக்கப்படடது. இதனால் முழுமையாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்.

அதனால்தான் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும்முன் கெடுபிடி காட்டுகிறேன். சொல்வதற்கு மாறாக படப்பிடிப்பில் மாற்றி எடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி செய்கிறேன். இதனால் என்னை கெடுபிடிக்காரி என்று சொன்னாலும் பரவாயில்லை. நான் தொடர்ந்து இப்படித்தான் இருப்பேன். நான் படவுலகில் வெற்றிகரமாக இருக்க இந்த கெடுபிடிதான் காரணம்.

Tags : Nayanthara ,
× RELATED இளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படமெடுத்து...