×

சூப்பர்வுமன் ஆகும் கவர்ச்சி நடிகை

ஆபாச வீடியோக்களில் நடித்துக்கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். இந்தியில் தொடங்கி  தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்வரை நடித்துவிட்டார்.  தற்போது வீரமாதேவி என்ற படத்தில் ராணி கதாபாத் திரத்தில் நடித்து வருகிறார். எவ்வளவோ பண்ணியாச்சி இத பண்ணமாட் டமா என்ற பணியில் திடீரென்று அவெஞ்சர் பாணியிலான சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க சன்னிக்கு ஞாபகம் வந்தது.

டெக்னாலஜி, காஸ்டியும்பற்றி பேசி முடிவு செய்தவர் கதைக்காக தனது கணவர் டேனியல் வெப்பருடன் கைகோர்த்தார். இருவரும் மணிக்கணக்கில் ஒன்றாக அமர்ந்து கலந்துபேசி கதையை முடிவு செய்தனர். படத்துக்கு கோர் என பெயரிடப்பட்ட நிலையில் அதற்கான வீடியோ ஒன்றை சன்னி வெளியிட்டிருக்கிறார். அதில், ‘கோர் இந்த கிரகத்தை சேர்ந்தவள் இல்லை.

ஆனாலும் தீய சக்திகளிடமிருந்து உலகை காக்க தயாராக இருக்கிறாள்’ என தெரிவித்துள்ளார். அந்தரத்திலிருந்து குதிக்கிறார், பறக்கும் காரில் பட்டய கிளப்புகிறார். கதை முதல் டெக்னாலஜி வரை எல்லாம் ரெடி படத்தை தயாரிக்கப்போவது அவரா அல்லது வேறுயாருமா என்பதுபற்றி சன்னி குறிப்பிடவில்லை. கோர் கதாபாத்திரம் பற்றி சன்னி லியோன் கூறும்போது, ‘சூப்பர்வுமன் கதையை நானும் எனது கணவர் டேனியல் வெப்பரும் இணைந்து உருவாக்கி னோம். அந்த வகையில் கோர் கதாபாத்திரம் தீய சக்திகளை அழிக்க வருகிறது’ என்றார்.

Tags : actress ,
× RELATED 2 மாதமாக அபுதாபியில் தவிக்கும் நடிகை