×

டெல்லியில் காற்றுமாசுவால் விஜய்64 ஷூட்டிங் தாமதம்

‘கைதி’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் 64வது படத்தை இயக்குகிறார். விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு 2 தினங் களுக்கு முன்பு கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. பிகில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே விஜய் 64 படத்தின் படப்பிடிப்பு ெதாடங்கப்பட்டது. சில நாட்களில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது.
 
கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவை விட காற்று மாசு அதிகமாக இருப்பதால் அதைக்கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த காற்று மாசு விஜய் 64வது படத்தின் படப்பிடிப்பையும் பாதித்திருக்கிறது. வேகமாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது மந்தகதியில் நடப்பதாக தகவல் வருகிறது. மாசு குறைந்தவுடன்  படப்பிடிப்பு வேலைகளை மிக வேகமாக நடத்தி முடிக்க இயக்குனர் லோகேஷ் திட்டமிட்டிருக்கிறார்.  இப்படம்  வரும் 2020-ஆம் ஆண்டு கோடைகால கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது.

Tags : Vijay 64 ,Delhi ,
× RELATED 108 ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம்;...