×

சர்க்கஸில் சேரப்போறீங்களா ரகுல்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொஞ்ச நாட்களாகவே அப்செட் மூடில் இருக்கிறார். சமீபத்தில் நடித்த படங்கள் ஹிட்டாக அமையாததால் ஏற்பட்ட கவலைதான் மூட் அவுட்டுக்கு காரணம். கவலையை மறக்க பல வித பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். குறிப்பாக யோகாவை கையிலெடுத்து தினமும் குட்டிக்கர்ணம் அடித்துக்கொண்டிருக்கிறார்.

கடினமான யோகா பயிற்சிகளை செய்வதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தலை மட்டுமே தலையில் இருக்க மற்றபடி இடுப்பு முதல் கால்வரை அப்படியே மேலெழுப்பி பின்பக்கமாக தரையை தொடும் கடினமான பயிற்சியை செய்துள்ளார். இந்த பயிற்சியில் கால் முட்டிக்கள் இரண்டும் தரையை தொடுவது என்பது பலராலும் சாத்தியப்படுவதில்லை அதை ரகுல் சாத்தியமாக்கியிருக்கிறார்.  

ரகுலின் பயிற்சியை கண்டு ரசிகர் ஒருவர், ‘நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள்... உங்கள் கால் முட்டி இரண்டும் தரையை தொட்டுவிட்டது.. இது சாதனைதான் என புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இன்னொரு ரசிகர், சர்க்கஸ் பெண்போல் இப்படியொரு பயிற்சி செய்கிறீர்களே... சர்க்கஸ் படம் ஏதாவது நடிக்கிறீர்களா.. என கலாய்த்திருக்கிறார்.

Tags :
× RELATED ஊரடங்கு உத்தரவால் பட்டினியில் வாடும்...