×

பார்த்த ஞாபகம் இல்லையோ...

பார்த்த ஞாபகம் இல்லையோ.. பருவ நாடகம் தொல்லையோ.. வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ.. மறந்ததே என் நெஞ்சமோ? என்று சிவாஜியுடன் புதிய பறவை படத்தில் மறக்க முடியாத  பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களின் மனத்தில் நிலையாக நின்றுவிட்ட வர் நடிகை சவுகார் ஜானகி. அவருக்கு வயது 87 ஆகிவிட்டாலும் இன்றைக்கும் கேமரா முன் நிற்கும் தகுதிக்குரியவராக தன்னை உற்சாகமாக வைத்திருக்கிறார்.

இதுவரை 399 படங்களில் நடித்திருக்கும் சவுகார், தனது 400 வது படத்தை சந்தானம் நடிக்கும் படம் மூலம் எட்டிப்பிடித்திருக்கிறார். இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். இதுபற்றி கண்ணன் கூறும்போது,’சவுகார் ஜானகி எந்த பாத்திரத்தில் நடித்தாலும் அவரின் நடிப்பு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக இருப்பதால் அவரது கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும். இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோகர் என பலர் நடிக்கின்றனர்’ என்றார். சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்துக்கு வித்தைக்காரன் என தலைப்பு வைப்பதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED மலையாள நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?