×

பிகில், கைதி படங்களுக்காக நெட்டில் வெடிக்கும் மோதல்

விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி படம் நாளை மறுதினம் 25ம்தேதி தீபாவளிக்கு 2 நாள் முன்னதாக திரைக்கு வருகிறது. இரண்டு படம் மட்டுமே தீபாவளிக்கு வெளியாவதால் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை விஜய், அஜீத் படங்கள் வெளியானால் இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் நெட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி மெசேஜ்போட்டு நெட்டை ரணகளமாக்கி வந்தனர். இம்முறை அந்த மோதல் விஜய், கார்த்தி படங்களுக்கானதாக மாறிவிட்டதை திரையுலகினர் யாரும் எதிர்பார்க்கவில்லை.

பிகில் படத்துக்கு டிக்கெட் புக்கிங் செய்வதற்கு பதிலாக கைதி படத்துக்கு டிக்கெட் பதிவு செய்துவிட்டேன் என்று விஜய் ரசிகர் ஒருவர், கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு டேக் செய்து டுவிட்டர் மெசேஜ் போட்டார். அதற்கு பதில் அளித்த பிரபு,’நீ அதிர்ஷ்டசாலி ஆனால் புத்திசாலி இல்ல போ’ என்று சூடாக பதில் அளித்தார்.

இது விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கைதி படத்தையும், தயாரிப்பாளரையும் தாக்கி கமென்ட் பதிவு செய்யத் தொடங்கிவிட் டனர். இந்த மோதல் நாள் முழுவதும் தொடர்ந்தது. இதற்கிடையில் கைதி படத்துக்கு ஆதரவாக அஜீத், சூர்யா, கார்த்தி ரசிகர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். எதிர்பாராத இந்த மோதல் தீபாவளிக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Piggle ,
× RELATED கூண்டுகளில் இருந்து பறவைகளுக்கு விடுதலை: ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள்