×

பாலிவுட் நடிகைக்காக பாலிசியை மாற்றிய நயன்தாரா...

நடிகை நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அதே நேரத்தில்  தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் பங்கேற்பதில்லை, அழகு சாதனை பொருட்களுக்கான விளம்பரத்தில் நடிப்பதில்லை என்று சில பாலிசிகளை கடைபிடித்து வருகிறார். கடந்த மாதங்களில் நடந்த விஜய்யின் பிகில், சிரஞ்சிவியின் சை ரா நரசிம்ம ரெட்டி படங்களின் புரமோஷன்களிலும் பங்கேற்காமல் தவிர்த்தார். அடுத்து ரஜினி நடித்திருக்கும் தர்பார் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது.

இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் நயன்தாரா, அந்த பட புரமோஷினிலாவது பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைப்புக்காக தனது பாலிசியை விட்டுக்கொடுத்திருக்கிறார் நயன்தாரா. கேத்ரினா கைப் பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை விற்க முடிவு செய்திருக்கிறார். அதற்கு விளம்பர படங்களில் நடித்து கொடுத்து உதவும்படி தன்னுடைய தோழி நடிகைகளிடம் அவர் கேட்டார். நயன்தாராவிடமும் இதுகுறித்து கேத்ரினா கேட்டார்.

அதற்கு உடனே ஒப்புதல் அளித்திருக்கிறார் நயன்தாரா. இதையடுத்து நயன்தாராவுக்கு கேத்ரினா நன்றி தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது,’தனது பிஸியான நேரத்திலும் நயன்தாரா நேரம் ஒதுக்கி படப்பிடிப்பில் பங்கேற்றதற்கு நன்றி’ என தெரிவித்துள்ளார். அதற்கு நயன்தாரா பதில் அளிக்காவிட்டாலும் அவரது சார்பில் காதலன் விக்னேஷ்சிவன் பதில் அளித்திருக்கிறார். அதில், ‘நயன்தாராவுக்காக ஸ்பெஷல் ட்ரீம்மென்ட் அளித்ததற்காக கேத்ரினாவுக்கு நன்றி’ என கூறி உள்ளார்.

Tags : Nayanthara ,actress ,
× RELATED விவசாயிகளுக்கு நிலம் வழங்கிய நடிகை