விஜய்சேதுபதி படம் ரிலீஸ் எப்போது?

விஜய் நடித்திருக்கும் பிகில், கார்த்தி நடித்திருக்கும் கைதி, விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் என 3 படங்கள் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 3 படங்களுக்கும் போட்டிபோட்டு புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்தது. தீபாவளி நெருங்க நெருங்க பரபரப்பு அதிகரித்த நிலையில் சங்கத்தமிழன் படம் தீபாவளி ரிலீஸ் போட்டியிலிருந்து விலகியது.

தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.  வரும் நவம்பர் 15ம் தேதி சங்கத்தமிழன் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ராஷிகண்ணா, நிவேதா பெதுராஜ் நடித்திருக்கின்றனர். வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்குகிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக வரும் 25ம் தேதி வெளியாகிறது. இப்படத்துக்கு டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கியிருக்கிறது. கொட்டும் மழையிலும் ரசிகர்கள் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்து வரும் காட்சிகள் நெட்டில் வெளியாகி உள்ளது.

Tags : Vijay Sethupathi ,
× RELATED விஷாலுடன் மோதும் விஜய்சேதுபதி