×

பிகில் எமோஜியை வெளியிட்ட தளபதி விஜய்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் எமோஜி எனப்படும் ஸ்டிக்கர் வெளியாகியுள்ளது. இதனை தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் பகிர்ந்து ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags : Vijay ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...