×

பாத்ரூமிற்குள் நடக்கும் கதையில் மனோசித்ரா

ஒரே வீட்டில் நடக்கும் கதை, ஒரே இரவில் நடக்கும் கதை என்ற மாறுபட்ட பாணியில் படங்கள் உருவாகின்றன. அந்த வகையில் பாத்ரூமிற்குள் நடக்கும் கதையாக உருவாகிறது ‘ரூம்’. ‘அம்முவாகிய நான்’, ‘நேற்று இன்று’ படங்களை இயக்கிய பத்மாமகன் இயக்குகிறார். ரூம் படம் பற்றி இயக்குனர் கூறும்போது,’படத்தின் ஹைலைட்டே  பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான்.

தமிழ் சினிமாவில் புதுமுயற்சியாக திரில்லர் படமாக உருவாகிறது. சுரேஷ் காமாட்சி, அஸ்வின் கே. தயாரிக்கின்றனர். அபிஷேக் வர்மா ஹீரோ. மனோசித்ரா ஹீரோயின். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ படங்களில் நடித்தவர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு. வினோத் யஜமான்யா இசை. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது’ என்றார்.

Tags : Manositra ,bathroom ,
× RELATED சாலையோர வியாபாரியை தாக்கிய எஸ்ஐக்கு...