×

அஜீத்துக்கு தீவிர ரசிகையான நஸ்ரியா... புதிய படத்தில் ஜோடி சேர்கிறார்?

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடிக்கும் படத்துக்கு வலிமை என பெயரிடப்பட்டிருக்கிறது. எச்.வினோத் இயக்குகிறார். இவர் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர். போனிகபூர் தயாரிக்கிறார். வலிமை படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் எளிமையாக நடந்தது.
விஸ்வாசம், வீரம், விவேகம், வேதாளம் போன்ற படங்களில் பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டைலில் நடித்து வந்த அஜீத், வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. அஜீத்துக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்ற ஆலோசனை பட குழுவில் நடந்து வருகிறது. நயன்தாரா, த்ரிஷா, தமன்னா போன்ற பெயர்கள் அடிபட்டாலும் நஸ்ரியா, ஜான்வி கபூர் பெயர்களும் அடிபடுகின்றன. ஜான்வியை பொறுத்தவரை தற்போதைக்கு தமிழில் நடிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்து வருகிறார்.

நஸ்ரியா திருமணத்துக்கு பிறகு தமிழில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவர் அஜீத்தின் தீவிர ரசிகை என்பது பலருக்கு தெரியாது. அஜீத்தின் ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் அப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாக நெட்டில் மெசேஜ் பகிர்ந்து அதகளம் செய்வது வழக்கம். வலிமை படத்துக்கும் அந்த வேலையை செய்தார். அநேகமாக வலிமையில் அஜீத்தின் ஜோடியாக நஸ்ரியா நடிப்பார் என்று நெட்டில் பரபரப்பாக தகவல் பரவுகிறது.

Tags : Nasriya ,Ajith ,
× RELATED நான் டி காக் விசிறி...: பட்லர் பரவசம்