×

சேர்ந்து நடித்தால் நட்பு கெட்டுபோகும் - ஐஸ்வர்யா தத்தா சொல்கிறார்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவும் நடிகை யாஷிகாவும் நெருங்கிய தோழிகள். பல இடங்களுக்கு ஜோடிபோட்டு செல்கின்றனர். தோழிகளாக இருந்தாலும் இதுவரை இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்ததில்லை.

நீங்கள் இருவரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பது எப்போது என்று ஐஸ்வர்யா தத்தாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறும்போது, தோழிகள் என்ற முறையில் நல்ல கதையில் வாய்ப்பு கிடைத்தால் சேர்ந்து நடிக்கலாம் என்று எண்ணியிருந்தோம்.

ஆனால் இப்போது சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. அதற்கு காரணம் எங்களது நட்புதான். இருவரும் நெருக்கமான நட்புடன் இருக்கிறோம். ஒரே படத்தில் இணைந்து நடித்தால் எங்களுக்குள் போட்டி ஏற்பட்டு நட்பு கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. நாங்கள் எப்போதும் போல நல்ல தோழிகளாகவே இருக்க விரும்புகிறோம்’ என்றார்.

Tags : Aishwarya Dutta ,
× RELATED இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு...