×

அனுஷ்கா வேடத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை

நடிகை அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் உருவாகிறது நிசப்தம் (சைலன்ஸ்) திரைப்படம். முன்னதாக அவர் பாக்மதி என்ற தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்தார். அது வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது அதற்கான நடிகை தேர்வாகி இருக்கிறார்.

லஸ்ட் ஸ்டோரிஸ், டாய்லட்: ஏக் பிரேம் கதா உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் பூமி பெட்நேகர். இவர், இந்தியில் உருவாகும் பாக்மதி படத்தில்  அனுஷ்கா கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். பொருத்தமான கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன் தற்போது அதற்கான தருணம் வந்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார் பூமி பெட்நேகர். தமிழ், தெலுங்கில் பாக்மதி படத்தை இயக்கிய ஜி.அசோக் இந்தி படத்தையும் இயக்குகிறார்.

Tags : Bollywood actress ,Anushka ,
× RELATED அனுஷ்காவின் மாற்றம் கைகொடுக்குமா?