×

ரகுல் ப்ரீத் சிங் பிரேக் எடுக்க முடிவு

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு என வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்ததுடன் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இடம் பிடித்தார். இந்நிலையில் அவர் நடித்த ஸ்பைடர், மன்மதடு 2 என இரண்டு படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் மனம் உடைந்தார். தமிழில் தீரன் போன்ற ஒரு சில படங்களில் தனது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தாலும் பின்னர் நடித்த சில படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லையாம். இதனாலும் நொந்துபோனார். தற்போது இந்தியன் 2ம் பாகத்தில் கமலுடன் நடித்து வருகிறார்.

இந்தியில் ரகுல் நடித்த ஒரு படம் ரிலீஸ் ஆகவேண்டி உள்ளது. சில வாரங்களுக்குமுன் பேட்டி அளித்த ரகுல்.’நான் கடினமாக உழைத்த சில படங்களுக்கு சமீபத்தில் பெரிய அளவில் வரவேற்பும், ஊக்கும்தரும் வகையில் பாராட்டும் கிடைக்கவில்லை. எனவே சில காலம் நடிப்பிலிருந்து பிரேக் (இடைவெளி) எடுத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிேறன். ஒரே மாதிரியான தவறுகனை நான் தொடர்ந்து அடிக்கடி செய்யவிரும்பவில்லை’ என்றார்.

Tags :
× RELATED டிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது...