×

பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை

பிரபல ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை காட்சிகள் அதாவது அதிகாலை 3 மணி, 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். அதற்கு நல்ல வரவேற்று இருந்தது. ஆனாலும் அதிகாலை காட்சிகள் திரையிடுவதற்கு சில தரப்பு ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தீபாவளியையொட்டி 2 நாள் முன்னதாக 25ம் தேதி 2 படங்கள் வெளியாகின்றன.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் பிகில் படமும், லோகேஷ் கனனராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படமும் வெளியாகின்றன. இந்நிலையில் பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். விதிகளை மீறி சிறப்புக்காட்சி ஒளிபரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
× RELATED புதிய தமிழ் திரைப்பட சங்கத்தை தொடங்கினார் இயக்குநர் பாரதிராஜா