விபத்தில் சிக்கிய மஞ்சுமா மோகன்.. காலில் ஆபரேஷன்

சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த மஞ்சுமா மோகன் விபத்தில் சிக்கினார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்துபற்றி வெளியில் சொல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த மஞ்சுமா நேற்றுதான் அந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்திருக்கிறார். ஊன்றுகோல் உதவியுடன் அவர் நடந்து வரும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இதுபற்றி மஞ்சுமா கூறியது: கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நான் எதிர்பாராத விபத்தில் சிக்கினேன்.

Advertising
Advertising

அதில் எனது காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சையும் நடந்தது. அடுத்த ஒரு மாதத்துக்கு நான் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். முன்பெல்லாம் என்னிடம் பேசுபவர்கள், உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த கடினமான தருணம் எது? என்பார்கள். அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் இதுவரை நடக்க வில்லை என்று பதில் அளிப்பேன்.

ஆனால் அந்த கடினமான தருணம் இந்த விபத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் அதுவும் ஒருவகையில் நன்மையாகவே அமைந்திருக்கிறது. என்னவொரு மனவருத்தமென்றால் நான் விரும்பி பார்க்கும் எனது வேலைகளை பார்க்க முடியவில்லை. இந்த தருணத்தை எனக்கான நேரமாக நான் எடுத்துக்கொண்டு மகிழ்கிறேன். இப்போது தான் எனக்கென்று நேரம் ஒதுக்குவது முக்கியம் என்பதை நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். இந்த சூழல் என்னை உறுதியானவளாக மாற்றியிருக்கிறது.

Related Stories: