50 நாட்கள் இரவில் தூங்காமல் நடித்த படம் - நரேன்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, தம்பிக்கோட்டை, கத்துக்குட்டி உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், நரேன். தற்போது கார்த்தியுடன் இணைந்து கைதி படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது சினிமா கேரியரில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்துள்ளது. டைரக்டர் மிஷ்கின் கேட்டதால், முகமூடி படத்தில் வில்லனாக நடித்தேன்.

Advertising
Advertising

பிறகு என்னை தேடி நிறைய வில்லன் கேரக்டர்கள் வந்தது. அப்படி நடிக்க பிடிக்காததால், தமிழில் அதிக படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், மலையாளத்தில் பல  படங்களில் நடிக்கிறேன். கார்த்தி என் நெருங்கிய நண்பர்.

அவர் மூலமாக கைதி வாய்ப்பு கிடைத்தது. போலீஸ் தனிப்படை அதிகாரி வேடத்தில், படம் முழுவதும் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளேன். இது தமிழில் நான் மறுபிரவேசம் செய்ய உதவும் படமாக இருக்கும். இரவில் மட்டுமே நடக்கும் கதை என்பதால், 50 நாட்கள் இரவில் தூங்காமல் நடித்தேன். படக்குழுவினரும் தூங்கவில்லை.

Related Stories: